அவல் மிக்சர் – செய்முறை

Print lankayarl.com in சமையல்

அவல் – 500 கிராம்,
மிளகாய்த்தூள் – 1 தே.கரண்டி,
முந்திரி பருப்பு – 2 தே.கரண்டி,
காய்ந்த திராட்சை – 2 தே.கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்

செய்முறை :

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்த கலந்த கொள்க.

இறுதியாக பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.