வெஜிடபிள் அவல் உப்புமா!

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருள்கள் .
அவல் – 2 கப்
கேரட் -1
உருளைக்கிழங்கு – 1
பச்சைபட்டாணி – ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் – 4
கடுகு – அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை .

அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும்.

காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்.சுவைாயன வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி.