பீன்ஸ் பொரியல்

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருள்கள்.

பீன்ஸ் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் அரை கப்
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து கொள்ளுங்கள் .

பூண்டை நசுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்க வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் ரெடி.