பிரியாணி கத்தரிக்காய் மசாலா

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
மிளகு - 10
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பொடிக்க வேண்டியவை:

வேர்க்கடலை - 2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை:


கத்தரிக்காய்களை நான்காக கீறி வைத்து கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு விழுதுசேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு கத்தரிக்காய்களை போட வேண்டும். பின் புளித் தண்ணீர் ஊற்றி வெந்தவுடன், பொடித்து வைத்துள்ள பொடியினை கத்தரிக்காயில் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து, எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.