அப்பளக் குழம்பு

Print lankayarl.com in சமையல்

தேவையானவை:
புளி - லெமன் அளவு
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
அப்பளம் - 3
கடுகு - அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வதக்கவும்.

புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.