மட்டன் உருளைக்கிழங்கு போண்டா

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருள்கள்.

கொத்து கறி - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மல்லி -3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
பச்சை மிளகாய் 1
உருளைக்கிழங்கு - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - 2
முட்டை - 2
மஞ்சள்பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை :


காய்ந்த மிளகாய் , விட்டுபட்டை,கிராம்பு , சோம்பு, மல்லி, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.

கொத்துகறியில் அரைத்த விழுது,உப்பு,மஞ்சள்பொடி,சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

கடாயில் நெய் ,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்துகறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து உருளைகிழங்க தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளைகருவை மட்டும் தனியே எடுத்துஅடித்து எடுக்கவும்.

கடாயில் எண்ணைய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.