அயிலை மீன் குழம்பு

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருள்கள்
அயிலை மீன் - 10
நல்லெண்ணெய்- 5 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம்- 2
தக்காளி - 3
வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 4
கறிவேப்பில்லை - 1 சிறிதளவு
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லிப்பொடி - 2 ஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை.

மீன் முழுதாக இருக்க வேண்டும். நன்கு கழுவி சுத்தம்செய்துக்கொள்ளவும்


வெங்காயம் தக்காளியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகுசீரகம்,வெந்தயம், போட்டு தாளித்து அதனுடன் பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதனுடன் அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கி அதனுடன்
புளி கரைசலை சேர்க்கவும்.

அதில் உப்பு கழுவிய மீன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மீன் வெந்ததும் இறக்கவும்.
சுவையான அயிலை மீன் குழம்பு ரெடி