நெய் மீன் குழம்பு

Print lankayarl.com in சமையல்

தேவையான பொருள்கள்

நெய் மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 6

அரைக்க

துருவிய தேங்காய் -- 1 கப்
தானியா தூள் - - 1ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6-
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
புளி - - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

முதலில் புளியை சிறிதளவு நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்பு கடாயை அடுப்பில் வைத்து அரைத்தவிழுதினைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கலக்கவும்.
பிறகு அத்துடன் புளித்தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு மீன் துண்டுகளைப் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
வேறொரு சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் கருவேப்பிலை மற்றும் வெங்காயம்சேர்த்து வதக்கவும்.

இதனை மீன் குழம்பில் ஊற்றி பின்பு பரிமாறவும்